sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரோவில்லில் சைக்ளத்தான்

 ஆரோவில்லில் சைக்ளத்தான்

 ஆரோவில்லில் சைக்ளத்தான்


ADDED : மார் 09, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: ஆரோவில்லில் சைக்கிள் ஓட்டுவதின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த சைக்ளத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் சைக்ளத்தான் குழு ஒவ்வொரு ஆண்டும், சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்ளத்தான் நடத்தி வருகிறது.

இந்தாண்டு நேற்று காலை 4:15 மணிக்கு செர்ட்டி டூயூடு வளாகத்தில் துவங்கியது. 100 கி.மீ., துாரம் கொண்ட இதில், 37 பேர் பங்கேற்றனர். குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், இ.சி.ஆர்., சாலை வழியாக காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு, நெசல், ஒழிந்தியாப்பட்டு, திண்டிவனம், மயிலம், செண்டூர் வழியாக சென்று, மீண்டும் தென்கோடிப்பாக்கம், கிளியனுார், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் புள்ளிச்சப்பள்ளம், இரும்பை, இடையஞ்சாவடி வழியாக செர்ட்டி டூயூடு வந்தடைந்தனர்.

இதே போன்று 50 கி.மீ., துார த்தில், 73 பேரும், 20 கி.மீ., துாரத்தில் 77 பேரும் பங்கேற்றனர். 50 கி.மீ., குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், இ.சி.ஆர்., சாலை, கீழ்புத்துப்பட்டு, ஒழிந்தியாப்பட்டு, கிளியனுார் வரை சென்று, புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக அதே இடத்திற்கு வந்தடைந்தனர். 20 கி.மீ., மற்றும் 10 கி.மீ., ஆரோவில் உட்புற சாலையில் நடந்தது.

இதில், இளம் சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சைக்ளத்தான் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us