/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறடி சாலையில் சென்டர் மீடியன் சேதம்
/
நுாறடி சாலையில் சென்டர் மீடியன் சேதம்
ADDED : பிப் 26, 2024 05:23 AM

புதுச்சேரி: நுாறடி சாலையில் சேதமடைந்துள்ள சென்டர் மீடியனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரப்பாலம் நுாறடி சாலையில் சென்டர் மீடியன் உள்ளது. மரப்பாலத்தில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை சென்டர் மீடியனில் வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளன.
அதில், ஆர்.டி.ஒ., அலுவலகம் எதிரே சென்டர் மீடியன் சேதமடைந்து, சிமென்ட் கற்கள் பெயர்ந்துள்ளன. இந்த கற்கள் சாலையில் விழுந்தால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
நுாறடி சாலையில் கடலுார் மற்றும் சென்னை மார்க்கமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வழியாக பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். விபத்துகள் நடப்பதற்குள், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சென்டர் மீடியனை சீரமைக்க வேண்டும்.

