தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்


UPDATED : நவ 14, 2026 07:32 PM

ADDED : நவ 14, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 07:32 PM ADDED : நவ 14, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னியக்கோவிலில் சாலையோரம் உள்ள பட்டுப் போன மரத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி – கடலுார் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள, கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் மதில் சுவர் பகுதியில் பட்டுப்போன புளிய மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் கிளைகள், காற்று சற்று வேகமாக வீசும் போதெல்லாம் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்து வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது.

இந்த மரம் நாளுக்கு நாள் வழிவிழந்து வரும் நிலையில், எந்நேரமும் உடைந்து சாலையில் விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டு போன மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us