/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதமான நீர்தேக்கத் தொட்டி அகற்றம்
/
சேதமான நீர்தேக்கத் தொட்டி அகற்றம்
ADDED : அக் 18, 2024 11:23 PM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் எதிரே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த, தொட்டி சேதமடைந்ததால், புதிதாக நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர் உத்தரவின் பேரில், சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியின் கட்டடம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியினை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியினையும் ஆணையர் பார்வையிட்டார். உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.