தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேரோட்டத்தில் நடனம் விஸ்வ ஹிந்து பரிஷித் புகார்

தேரோட்டத்தில் நடனம் விஸ்வ ஹிந்து பரிஷித் புகார்

தேரோட்டத்தில் நடனம் விஸ்வ ஹிந்து பரிஷித் புகார்


ADDED : ஆக 19, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் தேரோட்ட விழாவில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷித் சார்பில், சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் புகார் அளித்துள்ளது. 

புகார் மனுவில், ‘பிரிசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் கடந்த 14ம் தேதி, தேரோட்ட விழா நடந்தது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில், அடையாளம் தெரியாத நபர்கள், அமைதியை குலைக்கும் நோக்கில் நடத்தை செயல்பாடுகள் மூலம், நடனமாடியுள்ளனர்.

இவர்கள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துள்ளனர். அவர்களால் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் முகம் சுளிக்கும் செயல் ஏற்பட்டது. பொதுஇடத்தில், குழப்பமான சூழலை ஏற்படுத்தி மர்ம நபர்கள் யார் என, கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us