ADDED : அக் 07, 2024 10:59 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி விழுப்புரம் சாலை பூமியான்பேட்டை சந்திப்பில் ஆபத்தான நிலையில் உள்ள வாய்க்கால் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது.
இதில், பூமியான்பேட்டை சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையோர வடிகால் வாய்க்கால் அடைப்புகளை சரிசெய்ய, கடந்த சில மாதத்திற்கு முன்பு வாய்க்கால் சிலாப்புகள் அகற்றப்பட்டது. பணிகள் முடிந்தும் இதுவரை வாய்க்கால் மூடப்படவில்லை.
எவ்வித தடுப்பு, எச்சரிக்கை பலகைகள் ஏதும் இல்லாததால், சாலையில் செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தால் அச்சத்துடன் சென்று வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாய்க்காலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
