தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் ஜோதிர்லிங்க தரிசனம்

காரைக்காலில் ஜோதிர்லிங்க தரிசனம்

காரைக்காலில் ஜோதிர்லிங்க தரிசனம்


ADDED : ஆக 18, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் குளக்கரையில் 12 ஜோதிர்லிங்கங்களை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி சீராத்தோப்பில் பிரமாண்டமாக கட்டபட்டு வரும் ஜோதிர்லிங்க கோவிலில், பக்தர்கள் தங்கள் கைகளால்  சிவலிங்கத்திற்கு அபிேஷகம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால், அபிேஷகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரிக்கு கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 12 ஜோதிர் லிங்கங்களுக்கும், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் அபிேஷகம் செய்யப்பட்டது.

அதையடுத்து, நேற்று முன்தினம், 12 ஜோதிர்லிங்கங்கள், வழிபாட்டு கமிட்டி தலைவர் ராஜ்குமார் தலைமையில் 200 பக்தர்கள் புனித நீருடன் ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவில் குளக்கரைக்கு கொண்டுவந்தனர்.

பின், 12 ஜோதிர்லிங்கங்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஒன்றிணைந்து சிவபுராணம் பாடி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us