/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணி தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு
/
அரசு பணி தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு
ADDED : நவ 13, 2024 04:26 AM
புதுச்சேரி, : கூட்டுறவு உள்ளிட்ட மூன்று துறைகளின் அரசு பணிக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 38 இளநிலை ஆய்வாளர் பணியிடம், தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி மற்றும் திட்ட துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் தலா 5 பணியிடங்கள் நிரப்பிட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு 7,000 பேரும், ஆராய்ச்சியாளர் பணிக்கு 4,000 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி பணிக்கு 4,600 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இப்பணிகளுக்கான தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு, வரும் டிசம்பர் 15ம் தேதி நான்கு பிராந்தியங்களிலும் நடக்கிறது. திட்டத்துறை ஆராய்ச்சியாளர் பணிக்கு வரும் டிசம்பர் 29ம் தேதி காலையிலும், அன்று மதியம் தீயணைப்பு நிலைய அதிகாரி பணிக்கான தேர்வும் புதுச்சேரியில் மட்டும் நடக்கிறது.