ADDED : டிச 13, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் நிரவி ஊழியபத்து கீழத்தெருவை சேர்ந்த மோகன்.
இவரது மகள் கார்த்திகாயினி, 14; இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது தந்தையை மாலைவகுப்பு அழைந்து செல்ல கூறியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததால் அவர் அழைத்துசெல்லவில்லை. இதில் மனமுடைந்த அவர், அன்றிரவு அனைவரும் துாங்கிய பின் வீட்டில் துாக்குப்போட்டுகொண்டார். சந்தம் கேட்டு எழுந்த அவரது குடும்பத்தினர், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருந்துவனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

