ADDED : அக் 25, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
லாஸ்பேட்டை தவமணி நகரை சேர்ந்தவர், தனவேல், இவரது மகள், அமலாதேவி, 25; தனியார் கல்லுாரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு, படித்து வருகிறார்.
இவர் கடந்த21ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அமலாதேவியை காணாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.