தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

 பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

 பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


ADDED : ஜூன் 06, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியாங்குப்பம், பாரதியார் பல்கலைக் கூடத்தில் பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம், பி.எப்.ஏ., பைன் ஆர்ட் படிப்புகள் உள்ளன.

இங்குள்ள இசைத் துறையில் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளும் நடனத் துறையில் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டமும் பயிற்றுவிக்கப் படுகின்றன. நுண்கலைத் துறையைப் பொறுத்தமட்டில் வரைதல், ஓவியம், ஜவுளி வடிவமைப்பு, காட்சித் தொடர்பு வடிவமைப்பு மற்றும் சிற்பக்கலை ஆகிய முதன்மைப் பாடங்களுடன், கூடுதல் திறன்களாக நிழற்படக் கலை, அச்சுப் பதித்தல், கணினி வரைவியல் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன.

இ ப்படிப்புகளுக்கு கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்டாக் வாயிலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. 8ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுஇருந்த சூழ்நிலையில் இந்த காலக்கெடு வரும் 15ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நுண்கலைத் துறைக்கு 40 இடங்க ளும், இசைத் துறைக்கு 20 இடங்களும், நடனத் துறைக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் புதுச்சேரி, அரியாங்குப்பம், பழைய கடலுார் சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தை நேரடியாகவோ அல்லது 0413-260 0642, 0413-260 0935 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெறலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us