தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டாக்கில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

 சென்டாக்கில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

 சென்டாக்கில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு


ADDED : மே 28, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 2026--27 கல்வியாண்டிற்கான பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி நர்சிங் நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் புதுச்சேரி குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். முதலில் சென்டாக் இணைய தளத்தில் இளநிலை நீட் அல்லாத விண்ணப்பத்தை சமர்ப்பித்து விண்ணப்ப எண்ணை பெற வேண்டும்.

பின்னர் அந்த விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு சென்டாக் இணைய தளத்திலேயே PNET-2026 விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடந்த 18ம் தேதி முதல் வரும் 1ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 3ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us