/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீடிப்பு
/
பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீடிப்பு
பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீடிப்பு
பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க கெடு நீடிப்பு
ADDED : பிப் 05, 2026 05:35 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு பி.எச்டி., படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.
இதனிடையே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு நாடு முழுதும் 24 மையங்களில் நடைபெற உள்ளது. ஒரு மாணவர் இரண்டு பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இருப்பினும் இரண்டு படிப்புகளுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 750 ரூபாய், இதர பிரிவினர் 1,500 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. நுழைவு தேர்வு தேதி, தேர்வு மையத்தின் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இத்தகவலை புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

