புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 09:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்தில் 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தி, கடந்த மாதம் 29ம் தேதி மத்திய நிதி அமைச்சம் அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசு நிதித்துறையும் தற்போது அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை சார்புச் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையின்படி, புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டு, 01.07.2026 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் பயனடைவர்.
