ADDED : ஏப் 16, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், பாரதியார் சாலையோரம் நேற்று காலை 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
