UPDATED : நவ 19, 2026 04:00 PM
ADDED : நவ 19, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வினோபா நகரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பூட்டிய வீட்டில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி வினோபா நகர் பிளேஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்,75; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன்,மகள் இருவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரது மகன் நடராஜனை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் தனது சித்தியை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது நடராஜன் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
