ADDED : ஜன 28, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சேதராப்பட்டு அடுத்த கரசூர் சுப்ரீம் நகர் பின்புறத்தில் நேற்று முன்தினம் மாலை, 65 ; வயது மதிக்க தக்க மூதாட்டி இறந்த கிடப்பதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து இறந்த மூதாட்டி யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
