/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கப்பல் பணியாளர் மரணம் கிருமாம்பாக்கத்தில் மறியல்; புதுச்சேரி -கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மார் 19, 2025 06:31 AM

பாகூர், : கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இறந்த கப்பல் பணியாளர் உறவினர்கள் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் 50; புதுச்சேரி நீதிமன்ற ஊழியர். இவரது மகன் மதினேஷ்வரன் 27; கப்பல் பணியாளர். இவர் கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று மதியம், அவரது குடும்பத்தினர், அவரை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.30 மணியளவில் அவர் இறந்தார்.
தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியத்தால் மதினேஷ்வரன் இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின் புதுச்சேரி - கடலுார் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
போலீசார் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியலை கைவிட்டு, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் இரவு 8.00 மணியளவில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரவு 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உயிரிழந்த மதினேஷ்வரன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனால் புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போலீசார், வாகனங்களை விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக திரும்பி விட்டனர்.