/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை மிரட்டல் : ஒருவர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல் : ஒருவர் மீது வழக்கு
ADDED : அக் 25, 2025 02:53 AM
புதுச்சேரி: எலக்ட்ரிக் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேங்காய்திட்டு, புதுநகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 48; முதலியார்பேட்டையில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாட்சா, 47. இவர், தனது காரை ஆறுமுகம் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம்.
இதனிடையே ஆறுமுகத்தின் வீட்டில் உள்ள நாய், பாட்சாவின் காரை கீரல் செய்தது. இதனால் பாட்சாவுக்கும் ஆறுமுகத்துக்கும் வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி நள்ளிரவு பாட்சா திடீரென ஆறுமுகத்தின் வீட்டின் எதிரே நின்றுகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆறுமுகம் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாட்சா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

