ADDED : ஏப் 08, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கொம்பாக்கத்தை சேர்ந்ததவர் முருகையன்,51. வெளி நாட்டில் உள்ள இவரது நண்பரின் இடம் பொம்மையார்பாளையத்தில் உள்ளது. அந்த இடத்திற்கு, முருகையன் பவர் ஏஜென்டாக இருக்கிறார்.
அந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில், கோர்ட் நோட்டீஸ் எதற்காக அனுப்பினாய், என, அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் மொபைல் மூலம் முருகையனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, முருகையன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.