தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை மிரட்டல் வாலிபர்களுக்கு வலை

 கொலை மிரட்டல் வாலிபர்களுக்கு வலை

 கொலை மிரட்டல் வாலிபர்களுக்கு வலை


ADDED : மார் 04, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கதிர்காமம், முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசிங் மகன் சந்ரேஷ், 27; பெயின்டர். இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான சரண், 27; மணி, 28; ஆகியோருடன் திலாஸ்பேட்டை மேட்டுத் தெரு அருகில் உள்ள கோழிக்கடை அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அவர்களிடம், அவ்வழியாக பைக்கில் வந்த திலாஸ்பேட்டையச் சேர்ந்த வினோத், 20; மணிகண்டன், 21; மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். இருதரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வினோத் தகாத வார்த்தையால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்ரேஷ் மற்றும் சரண் ஆகியோரை சரமாரியாக வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து, சென்றனர்.

புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து வாலிபர்களைதேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us