/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடியோ அழைப்பில் சபை நடத்தலாமா என விவாதம்
/
வீடியோ அழைப்பில் சபை நடத்தலாமா என விவாதம்
ADDED : மார் 20, 2025 04:41 AM
புதுச்சேரி: சபையில் அமைச்சர்கள் இல்லாததால், வீடியோ காலில் சபை நடத்தலாமா என்ற விவாதம் நடந்தது.
புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாத்தில், மாகி எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத் தொகுதி பிரச்னைகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சபையில் அமைச்சர்கள் இல்லை.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., எழுந்து, மாகி எம்.எல்.ஏ., தனது தொகுதி சம்பந்தமான முக்கிய விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். அதனை கேட்ட அமைச்சர்கள் யாரும் இங்கு இல்லை என கூறினார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜவேலு, அமைச்சர்கள் அவரவர் அறையில் இருந்து கேட்டு கொண்டிருக்கின்றனர்.
அங்காளன்: நாங்களும் எங்களுடைய அறையில் இருந்து வீடியோ காலில் பேசலாமா.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: தொகுதி மக்களின் எண்ணத்தை கூறுகிறார். அதனை நேரடியாக கேட்டால் தான் நன்றாக இருக்கும். சட்டசபையின் எண்ணம் மக்களுக்கு சேவை செய்வது. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது அமைச்சர்கள் சபையில் இருப்பது இல்லை.
துறை செயலர்களும் இங்கு இருப்பதில்லை. அமைச்சர்கள் அவரவர் அறையில் இருப்பதால் எந்தவித பிரயோஜனம் இல்லை. இனி வீடியோ காலில் சட்டசபையை நடத்தலாமா.
சபாநாயகராக இருந்த ராஜவேலு, அமைச்சர்கள் குறைகளை கேட்டு கொண்டு உள்ளனர் என கூறி சமாதானம் செய்து வைத்தார்.