/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மின் வெட்டு பிரச்னை நாளை போராட்டம் நடத்த முடிவு
/
பாகூரில் மின் வெட்டு பிரச்னை நாளை போராட்டம் நடத்த முடிவு
பாகூரில் மின் வெட்டு பிரச்னை நாளை போராட்டம் நடத்த முடிவு
பாகூரில் மின் வெட்டு பிரச்னை நாளை போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூன் 22, 2025 01:28 AM
பாகூர் : பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத தொடர் வெட்டு இருந்து வருகிறது. இதனை சரி செய்திட கோரி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதனிடையே பாகூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க., பாகூர் தொகுதி செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பாகூரில் தொடரும் மின் வெட்டு பிரச்னையை சரி செய்ய தவறிய, மின் துறையை கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நாளை (23ம் தேதி) மாலை 6:30 மணிக்கு பாகூர் மாதா கோவில் திடல் அருகே ராந்தல் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவது என, முடிவு செய்யப்பட்டது.