/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுபான தொழிற்சாலை அனுமதி தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு
/
மதுபான தொழிற்சாலை அனுமதி தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு
மதுபான தொழிற்சாலை அனுமதி தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு
மதுபான தொழிற்சாலை அனுமதி தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு
ADDED : ஜன 17, 2025 05:49 AM
புதுச்சேரி: புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரும் முடிவினை அரசு தள்ளி வைத்துள்ளது.
புதுச்சேரியின் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை இறுதி செய்வதற்கான மாநில திட்ட குழு கூட்டம் இம்மாதம் இறுதியில் கூட உள்ளது.
இது தொடர்பான, அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் கடந்த 10ம்தேதி நடந்தது.
கூட்டத்தில் அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக, புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில் புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தரும் முடிவினை அரசு தற்காலிகாக தள்ளி வைத்துள்ளது.
ஏற்கனவே மதுபான ஆலை அனுமதி விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை என ஏற்கனவே பா.ஜ., அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.
அமைச்சரவை கூட்டத்தில் கூட மதுபான தொழிற்சாலை அனுமதி வேண்டாம் என்றே எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி தலைமை செயலரும் மதுபான தொழிற்சாலை பற்றி தற்போது தேவையில்லை என வலியுறுத்த, அதை தொடர்ந்து அரசும், மதுபான தொழிற்சாலை அனுமதியை தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளது.
மதுபான தொழிற்சாலை அனுமதியை தவிர்த்து கேபினெட்டில் எடுத்த மற்ற முடிவுகள் கவர்னரின் ஒப்புதலுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.