/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகை
/
பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகை
பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகை
பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகை
ADDED : டிச 17, 2024 05:22 AM

புதுச்சேரி: பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் சாரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சப்ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுகள் குளறுபடியாகவும், கால தாமதம் செய்து பதிவு செய்வதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.
இந்நிலையில், சாரம் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்திற்கு, பத்திர எழுத்தர்கள் சங்கதலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். பத்திர பதிவு அலுவலகத்திற்கு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வருவது கிடையாது, ஆதிகாலத்து சாப்ட்வேர்கள் மூலம் பத்திரப் பதிவு நடப்பதால், அடிக்கடி கம்யூட்டர்கள் பழுதாகி பத்திரப் பதிவு நடப்பது சிக்கல் ஏற்படுகிறது.
பத்திரப் பதிவு செய்ய வரும் நபர் தனக்கு விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் ஸ்லாட் புக்கிங் செய்து வரும்போது, சப்ரிஜிஸ்டர்கள் இருக்கையில் இருப்பது கிடையாது. ஒவ்வொரு சப்ரிஜிஸ்டர் அலுவலகமும் தனித்தனி விதிமுறைகளின் கீழ் இயங்கி வருவதால், பத்திரப் பதிவு செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது.
பத்திரப் பதிவு நடக்காததால் ஒட்டுமொத்த மாநில வருவாயும் பாதிக்கப்படுகிறது.
இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.