/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முறைகேடுகளை மறைக்கவே பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது; சம்பத் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 11, 2025 07:35 AM
புதுச்சேரி; முறைகேடுகளை மறைக்கவே பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். பத்திரப் பதிவு நிறுத்தத்திற்கு அரசு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டதும், அதனால் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளும் காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பெரிய கோளாறு ஏற்படப் போவதில்லை.
பத்திரப்பதிவு துறையில் போலி உயில் பதிந்து சொத்துகளை அபகரிப்பது, கோவில் நிலங்களை முறைகேடாக பதிவது போன்ற முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ., வழக்குப் பதிந்து, சிலரை கைது செய்து, விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு என காரணம் காட்டி முறைகேடாக பதிந்த பத்திரப்பதிவுகள் குறித்த தகவல்களை கணினி பதிவுகளில் இருந்து நீக்கவே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு வழிகாட்டு மதிப்பு உயர்த்துவதில் பிரச்னையெனில் பழைய முறையிலேயே பத்திரப்பதிவு நடைபெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.