தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவேகானந்தா கல்லுாரியில் தற்காப்பு பயிற்சிப் பட்டறை

விவேகானந்தா கல்லுாரியில் தற்காப்பு பயிற்சிப் பட்டறை

விவேகானந்தா கல்லுாரியில் தற்காப்பு பயிற்சிப் பட்டறை


UPDATED : நவ 28, 2026 07:46 PM

ADDED : நவ 28, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 07:46 PM ADDED : நவ 28, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியின் உள் புகார் குழு மற்றும் டிரஸ்ட் பார் யூத் அண்ட் லீடர்ஷிப் டெவலப்மென்ட் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் முழுமையான தற்காப்புப் பயிற்சிப் பட்டறை இரண்டு நாள் நடந்தது.

நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு துவக்கி வைத்து, பாலின சமத்துவம், பரஸ்பர மரியாதை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

டிரஸ்ட் பார் யூத் அண்ட் லீடர்ஷிப் டெவலப்மென்ட் அமைப்பின் பயிற்றுநர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்வழிப் பயிற்சிகளை வழங்கினர்.

பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு 'பாலின விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான ஆண்மை' தலைப்பிலும், மாணவிகளுக்கு 'முழுமையான தற்காப்புப் பயிற்சித் திட்டம்' தலைப்பிலும் தனித்தனியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சிப் பட்டறை மாணவர்களிடையே பாலின சமத்துவ உணர்வையும், தன்னம்பிக்கையையும், உடல், மனம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us