/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் தெரியாத அதிகாரிகளால் வழக்கு விசாரணையில் தொய்வு
/
தமிழ் தெரியாத அதிகாரிகளால் வழக்கு விசாரணையில் தொய்வு
தமிழ் தெரியாத அதிகாரிகளால் வழக்கு விசாரணையில் தொய்வு
தமிழ் தெரியாத அதிகாரிகளால் வழக்கு விசாரணையில் தொய்வு
ADDED : மார் 07, 2024 04:07 AM
புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கில், தமிழ் தெரியாத அதிகாரிகளால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
டில்லி உள்ளிட்ட பல மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வரும் பெரும்பாலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உள்ளூர் தமிழ் மொழி தெரிவதில்லை. இத்தகைய அதிகாரிகளை சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிக்கும்போது, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாததால் வழக்கை தீவிரமாக விசாரிக்க முடிவதில்லை. அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் உள்ளூர் போலீசாரும் விசாரணையை துவக்காமல் காலம் தாழ்த்துகின்றனர்.
தமிழ் தெரியாத அதிகாரிகள் என்ன சொல்கிறார்களே அதை வேத வாக்காக எடுத்து கொண்டு விசாரணை செல்லும்போது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியபோது, போராட்டக்காரர்களை அடக்குவதிற்காக துணை ராணுவத்தை போலீஸ் உயர் அதிகாரி வரவழைத்தார்.
இது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடைய செய்தது. போராட்டத்தின் நேரமும் நீடித்தது. உள்ளூர் போலீசார் போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கி கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்பே மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதை அனைத்தையும் தமிழ் தெரியாத உயர் அதிகாரிகள், சாலையோரம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரிவுகளில் இனி வரும் காலங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தமிழ் தெரியாத அதிகாரிகளை போலீஸ் துறைகளுக்குள் உள்ள அலுவலக பணிகளில் நியமிக்கலாம்.

