/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி குண்டு வெடிப்பு முதல்வர் இரங்கல்
/
டில்லி குண்டு வெடிப்பு முதல்வர் இரங்கல்
ADDED : நவ 12, 2025 07:34 AM
புதுச்சேரி: டில்லி கார் குண்டு வெடிப்பில் பலர் இறந்த சம்பவத்திற்கு முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், விடுத்துள்ள இரங்கல் செய்தி:
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிக்கிறது.
தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் கண்டனத்திற்குரியது. தேசத்தை அச்சுறுத்தம் இத்தகைய செயல்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு புதுச்சேரி அரசு என்றென்றும் துணை நிற்கும்.
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என, குறிப்பிட்டுள்ளார்.

