/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
/
அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
ADDED : நவ 05, 2024 06:44 AM
புதுச்சேரி: தேசப்பற்றை முன் வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, ராமலிங்கம் எம்.எல்.ஏ., விடுத்துள்ள செய்திகுறிப்பு:
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை முன் வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தேசப்பற்றை உருவாக்கும் வகையில் எடுக்கப்பட்டது.
போதை பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, இளைய தலைமுறையினர், மாணவர்கள் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் உள்ளது.
புதுச்சேரியில், அனைத்து பள்ளி மாணவர்களை அழைத்து சென்று இந்த திரைப்படத்தை இலவசமாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ராணுவத்தையும், தேசப்பற்றையும் முன் வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.