/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
/
ஜிப்மரில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
ஜிப்மரில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
ஜிப்மரில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 03:32 AM

புதுச்சேரி: ஜிப்மரில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என, அசோக் பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகியை அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். ஜிப்மரில் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்னைகளை போர்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என, வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவில், ஜிப்மருக்கு தினசரி தமிழகம் மற்றும் புதுவை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அனைத்து மருத்துவ துறையும் நிரம்பி வழிகிறது. மருத்துவர்களுக்கு பணிச்சுமை, மனச்சோர்வு ஏற்படுகிறது. அனைத்து மருத்துவ துறை பிரிவுகளுக்கு கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். புற நோயாளிகளுக்கு காலதாமதம் இன்றி சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி, 'கூடுதல் மருத்துவரை நியமிப்பதற்கான கோப்பை தயார் செய்து டில்லிக்கு அனுப்பி உள்ளதாகவும், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்' என்றார்.