/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' தேர்வு மையங்களை அதிகரிக்க கோரிக்கை
/
'நீட்' தேர்வு மையங்களை அதிகரிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 02:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை நீட் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க ம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் பாலசுப்ர மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தேசிய தேர்வு முகமை வரும் 3ம் தேதி முதுநிலை மருத்துவ நீட் நுழைவு தேர்வு ஒரு வேளை தேர்வாக காலையில் நடத்த உள்ளது. புதுச் சேரியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 4 தேர்வு மையங்கள் மட்டுமே புதுச்சேரி மாணவர்கள் தேர்வு எழுத அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பித்த பெரும்பாலான மாணவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாணவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வீண் அலைச்சலும் பொ ருட்செலவும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி தான் நடந்து வருகிறது. ஆகையால் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு , முதுநிலை நீட் நுழைவு தேர்வு மையங்களை புதுச்சேரியில் எதிர்காலத்தில் அதிகரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.