/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு ஹெல்மெட் கட்டாயமாக்க கோரிக்கை
/
விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு ஹெல்மெட் கட்டாயமாக்க கோரிக்கை
விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு ஹெல்மெட் கட்டாயமாக்க கோரிக்கை
விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு ஹெல்மெட் கட்டாயமாக்க கோரிக்கை
ADDED : ஜன 10, 2025 05:51 AM
புதுச்சேரி: விழிப்புணர்வை ஏற்படுத்திய பின் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். புதுச்சேரி மக்களுக்கு செயற்கை நெருக்கடியாக ஹெல்மெட் அணியும் விவகாரம் அமைந்துள்ளது.
பொதுமக்கள் செல்ல வேண்டிய பயண துாரம் அதிகபட்சம் 3 கி.மீ.,க்குள் அமைந்து விடுவதால், ஹெல்மட் அணிவது அவரவர் சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கினால், குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமானதாக இருக்கும் என போலீசாரே புலம்பும் நிலலை உள்ளது.
என்.ஆர்.காங்.,தேர்தல் அறிக்கையிலேயே நகரப் பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே முதல்வர் ஹெல்மெட் விவகாரத்தில் நல்ல முடிவை போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஹெல்மெட் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பின் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

