/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை கட்டுமான உதவியாளர் பணி வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தல்
/
மின்துறை கட்டுமான உதவியாளர் பணி வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தல்
மின்துறை கட்டுமான உதவியாளர் பணி வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தல்
மின்துறை கட்டுமான உதவியாளர் பணி வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 10, 2025 04:11 AM
புதுச்சேரி:மின்துறை கட்டுமான உதவியாளர் பணிக்கு, கொரோனா காலத்தில் பொதுத்தேர்வு மதிப்பெண் இல்லாமல் வெற்றி பெற்ற மாணவர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
புதுச்சேரி அரசு மின்துறை 177 மின் கட்டுமான உதவியாளர் பணிக்கு, இணையதளம் மூலம் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் மின்துறையிடம் நேரடியாக மே 2ம் தேதி உண்மை ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு எழுது தேர்வு எதுவும் தேவையில்லை என, மின்துறை அறிவித்துள்ளது.
மேற்படி, பணிக்கு தகுதியாக 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 50 சதவீதமும், ஐ.டி.ஐ., படிப்பிற்கு 100 சதவீதமும், தொழில் பழகுனர் 10 சதவீதமும், சிறப்பு மதிப்பெண்ணாக 15 சதவீதம் என, மொத்தம் 175 மதிப்பெண்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், மதிப்பெண் இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.
எனவே, வரும் 25ம் தேதிக்குள் பெறப்படும் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பங்களின் அடிப்படையில் கொரோனா காலத்தில் பொதுத்தேர்வு மதிப்பெண் இல்லாமல் வெற்றி பெற்ற மாணவர்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

