/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு
/
ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு
ADDED : ஆக 11, 2025 06:49 AM
புதுச்சேரி : பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து பாதுகாத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.
மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி மற்றும் நிர்வாகிகள் டி.ஜி.பி., ஷாலினி சிங்கிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் பெண் குழந்தைகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பெண்கள் சாலையில் நடந்து செல்வதற்கும், பெண் குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கும் அனுமதிக்க முடியாத அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.
சுற்றுலா துறையை மேம்பாட்டு பெயரில் வார இறுதி நாட்களில்வெளி மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஆகையால், போலீஸ் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

