கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு
கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு
ADDED : ஜன 31, 2026 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பு துச்சேரி, செட்டி வீதியை சேர்ந்தவர் பழனிவேல், 70. இவர், நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள இடத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.
அங்கு குடியிருந்தவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் எ ன உரிமை கோரினர்.
இதையடுத்து, பழனிவேல் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த இடம் பழனிவேலுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின், அங்கிருந்தவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், அந்த சொத்து பழனிவேலுக்கு தான் சொந்தம் எனவும், ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றி, கட்டடங்களை இடித்து காலி இடமாக ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று அமினாக்கள் ஜெய அம்பி, மாணிக்கம், செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், வி.ஏ.ஓ., சண்முகம், சர்வேயர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, காலி இடமாக பழனிவேலிடம் ஒப்படைக்கப் பட்டது.
