/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மின்துறை தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2025 05:48 AM

புதுச்சேரி : சண்டிகர் மின்துறையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மின்துறை தனியார் மய மற்றும் கார்ப்பரேஷன் மைய எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், சண்டிகர் மின்துறையை தனியார் மயப்படுத்த உள்ள நடவடிக்கையை கண்டித்து, நேற்று காலை மின்துறை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சண்டிகர் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போராட்டக்குழு தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் போராட்டக்குழுவோடு இணைந்துள்ள மின்துறையில் உள்ள அனைத்து சங்கங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். மத்திய அரசின் தனியார் மய நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக போராட்டக்குழு பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

