/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 18, 2024 03:37 AM
புதுச்சேரி, : தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக கவர்னர் ரவி, கிறிஸ்துவ மதபோதகர் ஜி.யு.போப்பை குறித்து சர்ச்சையாக பேசியது கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து தென்னிந்திய திருச்சபை பேராலயம் , புதுச்சேரி கிளை சார்பில் ரோமன்ரோலண்ட் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் தமிழக கவர்னரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. போதகர் இமானுவேல் தலைமை தங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர் போப் குறித்து பேசியதை வாபஸ் வாங்கவேண்டும். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

