/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2024 05:41 AM

புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
சுதந்திர இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வை போல் வேறு எப்போதும் ஆட்சி நடந்தது இல்லை. மாநிலங்களில் கவர்னர் மூலம் அடிமை ஆட்சியை நடத்த பா.ஜ., துடிக்கிறது. ஏற்கனவே புதுச்சேரியில் கிரண்பேடி மூலம் எனது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர்.
இப்போது தமிழகம், கேரளா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களை வைத்து ஆட்சி நடத்த பா.ஜ., துடிக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஓர் அணியில் நின்று பா.ஜ.,விற்கு சரியான பாடம் கற்பிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில், 'கூட்டாச்சி கோட்பாடுகளுக்கு எதிராக மாநில உரிமைகளில் தலையிடும் கவர்னர் மக்கள் சக்தியுடன் விரட்டி அடிக்கபடுவர்' என்றார்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினர்.
மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.

