/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருவாய்த் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 04, 2026 04:48 AM

பாகூர்: தாய்வழி சாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள வருவாய் துறையை கண்டித்து, புதுச்சேரி பூர்விக பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர், பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட் உத்தரவின் பேரில், புதுச்சேரியில் தாய்வழி பூர்வீகமாக கொண்டு வசித்து வரும் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எம்.பி.சி., - பி.சி., பயனாளிகளுக்கு, அரசின் நலத்திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு பெற்றிடும் வகையில், வருவாய் துறையின் மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, இச்சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாய்வழி சாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைத்திருக்கும் வருவாய் துறையை, கண்டித்து பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் புதுச்சேரி பூர்விக பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். தாயப்பன், சண்முகம், ஜானகிராமன், கலியவரதன், தனசு, தவமணி, சிசிகுமார், வீரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். தாய்வழி சான்றிதழ் வழங்காத பட்சத்தில் சட்டசபை தேர்தலை புறக்னிக்க போவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

