உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2024 04:42 AM

அ நிறம் | அளவு
காரைக்கால் : புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாத அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் கடல்கரைச்சாலையில் நேற்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் தலைவர் முன்னாள் எம்.பி., ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ராஜன்,செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி தேர்லை உடன் நடத்தவேண்டும்.
மாநில அந்தஸ்து கேட்டுகும் அரசு உள்ளாட்சி மக்களுக்கு அதிகாரம் வழங்காமல் தடுப்பதை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
