/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரயக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
/
சாரயக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் ஏரிக்கரை வீதியில் உள்ள சாராயக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் சிவன் கோயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பரமசிவம், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். கோவிந்தராசு, கமலநாதன், சரவணன், முருகசாமி முன்னிலை வகித்தனர்.
மணிவண்ணன், காங்., கோபு, மா.கம்யூ., சரவணன், என்.ஆர்.காங்., ராமு நாயக்கர், கம்யூ., வசந்தி, ஜோதி, கலியமூர்த்தி கண்டித்து பேசினர். அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

