/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம்: சிவா அறிவிப்பு
/
கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம்: சிவா அறிவிப்பு
கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம்: சிவா அறிவிப்பு
கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம்: சிவா அறிவிப்பு
ADDED : ஜன 23, 2024 04:46 AM
புதுச்சேர : முடங்கிப்போன திட்டங்களை அரசு இயந்திரம் மூலம் விளம்பரம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, எதுவுமே செய்யாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான காப்பீடு திட்டமும் அவல நிலையில் தான் உள்ளது. சிறப்பாக செயல்பட்ட காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மாற்றி பிரதமர் கல்வீடு கட்டும் திட்டம் கொண்டு வந்ததில் இருந்து விண்ணப்பித்த எவருக்கும் பயணளிக்காமல் உள்ளது.
இதுபோன்று நடக்காத திட்டங்களை எல்லாம் நடந்ததாக மக்களிடத்தில் பொய் பிரசாரம் செய்வதும், அதற்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர்.கவர்னரே நேரிடையாக அந்த பிரசார பயணத்தில் பங்கேற்று அதிகாரிகளை வற்புறுத்தி பிரசாரம் செய்ய வலியுறுத்துவதும் வன்மையாக கண்டிக்கக்தக்கதாகும்.
தேர்தலை நடத்துகின்ற மாவட்ட கலெக்டர் இதுபோன்ற கட்சி சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று துணைபோவதை ஏற்க முடியாது. இந்த பிரசாரங்களில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை கண்டித்து முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று 23ம் தேதி காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை முன்பும் தி.மு.க.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

