/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2024 04:49 AM

புதுச்சேரி, : புதுச்சேரி மாநில துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சட்டசபை அருகே நடந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி முன்னிலை வகித்தார்.அமைப்பாளர் கயல்விழி வரவேற்றார்.
போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா கண்டன உரையாற்றினார்.போராட்டத்தில் தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு அமைப்பாளர் நிக்கோலஸ்,பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தின்போது, நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் மூன்று விதமான சம்பளம் குறைவாக வழங்கப்படுகின்றது.இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து தினக்கூலியாக 600 ரூபாய் அல்லது மாத சம்பளமாக 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். நகரின் துாய்மைக்காக இரவு பகலாக வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கட்டணம் இல்லா பஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
பாட்கோ நிறுவனத்தில் நல வாரியம் துவங்கி நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.உள்ளாட்சி துறை மூலம் நிரந்தர நகராட்சி ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டு வசதி, குழந்தைகள் கல்வி உதவி போன்ற அனைத்து திட்டங்களையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

