/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு விழிப்புணர்வு: அரசு பள்ளி சாதனை
/
டெங்கு விழிப்புணர்வு: அரசு பள்ளி சாதனை
ADDED : நவ 27, 2024 05:34 AM

புதுச்சேரி : மாநில அளவில் நடந்த டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியில் காலாப்பட்டு குப்பம் அரசு தொடக்கப் பள்ளி முதல் பரிசு, சிறந்த படைப்புகான பரிசுகளை பெற்று சாதனை படைத்தது.
புதுச்சேரி சுகாதாரத்துறை, நல்வாழ்வுத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ட்ரீம்ஸ் 24 திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மாநில அளவிலான டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ரோல் பிளே, போஸ்டர் மேக்கிங் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு படைப்புகள் இடம்பெற்றன.
இதில் காலாப்பட்டு குப்பம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை வரலட்சுமி அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும், இவரது வழிகாட்டுதலின் பேரில், டெங்கு கொசு வீட்டிற்கு வரமால் தடுக்கும் வகையில், பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர்கள் திருஸ், வர்ஷன் ஆகிேயார் 'வீட்டிற்கு ஒரு சாமந்தி பூ செடி, எலுமிச்சை புல் வளர்ப்பு' படைப்புகள், சிறந்த படைப்புக்கான விருதினை பெற்றன.

