ADDED : அக் 19, 2024 11:48 PM

பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.
பாகூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்தவேலு ஊர்வலத்தை துவக்கி வைத்து,டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமானஏடீஸ் கொசுக்கள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
ஏற்பாடுகளை பள்ளி மேனிலை எழுத்தர் அருள்மாறன், மருத்துவப் பணியாளர்கள் புகழேந்தி, செல்வம், கார்த்திகேயன், பாகூர் போலீசார், பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஊர்வலத்தில் மாணவிகள் பாகூர் தேரடி வீதி வழியாக சென்று, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.