/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரியில் பல் தொகுப்பு முகாம்
/
மருத்துவ கல்லுாரியில் பல் தொகுப்பு முகாம்
ADDED : பிப் 22, 2026 05:22 AM

புதுச்சேரி: கோரிமேடு, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரியின் செயற்கை பல் தொகுப்பு துறை சார்பில், பல் தொகுப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல் தொகுப்பினை வழங்கி, இந்த மருத்துவ முகாமை கிராமப்புறங்களிலும், காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களிலும் விரிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, டாக்டர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.முகாமில் பற்களை முற்றிலுமாக இழந்தவர்களுக்கு 24 பணி நேரத்திற்குள் 50 முழு பல் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லுாரியின் பல் தொகுப்பு துறை நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

