ADDED : மார் 08, 2024 06:45 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் உலக பல் மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது.
வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமசந்திரன் தலைமை தாங்கினார். கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா முன்னிலை வகித்தனர். பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் செந்தில்நாதன் வரவேற்றார்.
உலக பல் மருத்துவ தினத்தை முன்னிட்டு பல் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அறக்கட்டளை நிர்வாகி ராதா ராமசந்திரன் திறந்து வைத்து, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
விழாவில் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் பல்வேறு கல்லுாரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி, இந்திராணி நர்சிங் கல்லுாரி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு கல்லுாரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல் மருத்துவ கண்காட்சியை பார்வையிட்டனர்.

