/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயற்கை பல் தொகுப்பாளர்கள் தின விழா
/
செயற்கை பல் தொகுப்பாளர்கள் தின விழா
ADDED : ஜன 23, 2025 05:33 AM

புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் செயற்கை பல் தொகுப்பு பிரிவு சார்பில் செயற்கை பல் தொகுப்பாளர்கள் தின விழா நடந்தது.
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவன முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கி, பல் மருத்துவம் மற்றும் உணவு முறை குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, ஆரோக்கிய உணவுமுறை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
இதில், செயற்கை பல் தொகுப்பு பிரிவிற்கு சிகிச்சைக்கு வந்த பற்கள் இல்லாத மூத்த குடிமக்களுக்கு ஆரோக்கிய உணவு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் இலவச ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துறைத் தலைவர் ராணுகுமாரி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

