/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெப் எனேபிள் பவுண்டேஷன் 15வது ஆண்டு விழா
/
டெப் எனேபிள் பவுண்டேஷன் 15வது ஆண்டு விழா
ADDED : டிச 12, 2024 06:22 AM

புதுச்சேரி: டெப் எனேபிள் பவுண்டேஷன் 15வது ஆண்டு விழா மற்றும் ஹெலன் கெல்லர் விருது வழங்கும் விழா நடந்தது.
அரியாங்குப்பம் ஏ.வி.ஆர்.கே., மகாலில் நடந்த விழாவிற்கு, டேட்டா மேலாண்மை மற்றும் இடன் பவர் குவாலிட்டி நிறுவன துணை பொது மேலாளர் ஜெயகணேஷ், பள்ளி கல்வித்துறை சர்வ சிக் ஷா அபியான் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன், டெப் எனேபிள் பவுண்டேஷன் பொருளாளர் ஆண்டாள் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், கிராமணி சங்க தலைவர் புரேந்திரதாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
டெப் எனேபிள் பவுண்டேஷன், காது கேளாதோரை சம கால சமூகத்தில் மேம்படுத்ததவும், சமூக மேம்பாடு, கல்வி வளங்களை வழங்குவதின் மூலம் வாழ்க்கை தரம் உயர்த்துதல், சமூக கலாசார விழிப்புணர்வு, காது கேளாதோருக்கான தடையற்ற தகவல் தொடர்புக்கும் பாடுப்பட்டு வருகிறது.
கல்வியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது, கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் ஆசிரியர் விருது, தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
காது கேளாதோர் சமூகத்தைச் சேர்ந்தோரின் நடனம், நாடக நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், ஊழியர்கள் அமர்நாத், அஜித்குமார், மொழிபெயர்ப்பாளர் சொர்ணலட்சுமி, புதுச்சேரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் பொதுச்செயலாளர் பாசித் செய்திருந்தனர்.

